முழுவதும் செதில்களை கொண்ட "மீன் சிறுவன்"
உடல் முழுவதும் மீன் செதில்கள் போன்ற வளர்ச்சியைக் கொண்டுள்ள 14 மாத ஆண் குழந்தையொன்று சீன மருத்துவர்களை திணற வைத்துள்ளது.
கிழக்கு சீனாவிலுள்ள ஜின்ஹு நகரைச் சேர்ந்த ஸோங் ஷெங் என்ற குழந்தை "மீன் சிறுவன்" என செல்லமாக அழைக்கப்படுகிறான்.
உடல் தானாக குளிர்மையடையாத நிலையை ஏற்படுத்தும் அரிய மரபணு பிரச்சினையொன்றுக்கு ஸோங் ஷெங் ஆளாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
தோலிலுள்ள துவாரங்களினூடாக வியர்வையையோ அன்றி வெப்பத்தையோ வெளியேற்ற முடியாத நிலையில், இந்தக் குழந்தை உள்ளமையால் உலர்வடையும் மேற்தோல் மீன் செதில்கள் போன்ற தோற்றத்தை அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சிறுவனின் உடல் வெப்பத்தைத் தணிவிக்க அச்சிறுவனை பனிக்கட்டித் தொட்டியில் அவனது பெற்றோர்கள் அடிக்கடி அமர வைக்கின்றனர்.
இது தொடர்பில் சிறுவனின் தந்தை சோங் டெஹுயி விபரிக்கையில், "எமது மகன் எப்போதும் வலியால் துடிக்கிறான். நாம் போதிய பனிக்கட்டியில் அவனை அமர வைக்காத சமயத்தில் அவனுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது" என்று கூறினார்.
"எனது மகனுக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த பல மருத்துவர்கள் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. நாம் அவனைக் குணப்படுத்த கடவுளின் தயவையே நாடியுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
திங்கள், 8 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக